பசலைக்கீரையில் இவ்வளவு நன்மைகளா?
பசலைக்கீரையில் இவ்வளவு நன்மைகளா? பசலைக்கீரை போல் உடலுக்கு நன்மை செய்யும் சத்து உள்ள எளிய உணவு வேறு இல்லை எனலாம் . பசலைக் கீரை பொதுவாக மூன்று வகைப்படும். சிறு வெற்றிலை அளவில் நிறமுடையதாக இருக்கும் இலைகளுடன் கொடியாகப் படரும் பசலை கொடிப்பசலை எனப்படுகிறது. இதை வீட்டுத் தோட்டத்திலும் தொட்டிகளிலும் எளிதாக வளர்க்கலாம். தரைப்பசலையின் இலைகள் மிகவும் சிறுத்து இளஞ்சிவப்பாகவும், பச்சையாகவும் இருக்கும். இது தரையில் படரும். இரும்புச் சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் எல்லாமே இதில் அதிகம். ஃபோலாசின் நோய்த் தடுப்புக்கு முக்கியம் என்பதால் இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது. அதே சமயம் இதிலிருக்கும் ஆக்ஸாலிக் அமிலம் உடலில் இரும்பு, கால்சியம் சேராமல் தடுக்கிறது. இதனால் இதய நோயாளிகள் இந்தக் கீரையை அளவுக்குமீறி சாப்பிடக் கூடாது. இதிலுள்ள வைட்டமின் ஏ பார்வைக் கோளாறை தடுப்பதோடு சோர்வை நீக்கி, ரத்த விருத்திக்கும் உதவுகிறது. இந்த கீரையில் வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் உள்ளன . சுண்ணாம்பு சத்து நார் சத்து இரும்பு சத்து அடங்கியது . இது தாதுவை கெட்டிப்படுத்தும். மூளைக்கு சக்தி கொடுக்கும் . உ...